மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் 55வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக “நாவல் ஊற்று” எனும் சஞ்சிகை வெளியீட்டு விழா செவ்வாய்க் கிழமை (01) பாடசாலை மண்டபத்தில் அதிபர் எஸ்.கோபாலப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாடசாலையின் ஸ்தாபக ஆசிரியர்கள், பழைய அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் ஆக்கங்கள் அடங்கியதும், வித்தியாலயத்தின் வரலாறு பற்றியதுமான கோர்ப்புகள் அடங்கிய சஞ்சிகை வெளியீடு, 2015 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுகளைக் கௌரவித்தல், பாடசாலை ஸ்தாபகர் மற்றும் பாடசாலை ஸ்தாப ஆசிரியர்கள், பாடசாலை பழைய அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிப்பு, மற்றும் சஞ்சிகை ஆசிரியர் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment