15 Dec 2015

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைத்திருக்க வேண்டும்

SHARE
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைத்திருக்க வேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் பதவி வழி இணைத்தலைவர் பதவியையும் வீடுத்து மேலதிக இணைத் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் இது இனவாதமல்ல இன உரிமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலிக்கு வழங்கப்பட்டள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக அரிய நேத்திரனிடம்  திங்கட்கிழமை (14) கேட்டபோது அவர் மேலும் கூறியதாவது
;
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியென்பது இதுவரை காலமும் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களே தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் கடந்த காலங்களில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற ஜோசப் பரராஜசிங்கம் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

2015 பொதுத் தேர்தலில் மைத்திரி அரசின் நல்லாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்துள்ளது.; மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் என மக்கள மத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில் தலைவர் பதவி பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் மக்களிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவி கிடைக்க முன்பு எமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்ததே பெரும் ஏமாற்றமாகும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதம் தமிழ் மக்கள் வாழும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 3 நாடாழுமன்ற  உறுப்பினர்கள் தெரிவாகிய நிலையில் 25 வீதமுள்ள முஸ்லிம் மக்களிற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பதவி வழி இணைத்ததலைவர் பதவி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு வழங்கும் போது மேலதிக இணைத்தலைவர் பதவி ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்க வேண்டும். இது தமிழ் மக்களின் ஏமாற்றத்தைத் தடுக்கும். 

யாழ் மாவட்டத்தில் யார் வந்தாலும் பிரச்சினையல்ல ஏனனில் எல்லோரும் தமிழர்கள்தான். கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியில் தலைவர்கள் மாவட்ட அரச தலைவர்களை வைத்து காணி மற்றும் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக கபளிகர முயற்சியில் ஈடுபட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. எதிர் காலங்களிலும் இத்தகைய செயல்பாடுகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் முழுத் தமிழ் மக்களையும் திரட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை யாரும் தடுக்க முடியாது போகும் எனத் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: