23 Dec 2015

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த கழிவுகள் அகற்றும் செயற்பாடு புதன் கிழமையிலிருந்து இடைநிறுத்தம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும், கழிவுகள் அகற்றும், செயற்பாடு நாளை புதன் கிழமையிலிருந்து (23) தொடர்ந்து வரும் 15 நாட்களுக்கு இடம்பெறாது, என மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யாகேஸ்வரி வசந்தகுமாரன் இன்று செவ்வாய் கிழமை மாலை இப்பிரதேச பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம், பொதுஅறிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தில் சேகரிக்கப் பட்டுவரும் கழிவுகளை களுதாவளை கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதானால் அவ்விடத்தில் இன்றிலிருந்து கழிவுகள் கொட்டப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்ளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர், எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால், மற்றும், களுதாவளைக் கிராம அபிவிருத்திச் சங்கம், ஆகியோர் இணைந்து பிரதேச சபைக் காரியாலத்தில்  இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.

எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர், எம்.கோபாலரெத்தினத்தினால் கழிவுகள் கொட்டுவதற்குரிய இடம் அடையாளப்படுத்தித் தரப்படும் அதன்பின்னர் எமது வழமையான கழிவகற்றும் செயற்பாடுகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: