மட்டக்கள்பபு மாவட்டத்தில் மிகவும் திறமையாக கடமை புரியும் மாவட்ட அரசாங்க அதிபரை ஒருபோதும் இடம்மாற்றக் கூடாது என்பதை இவ்விடத்தில் பிரதியமைட்ச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். என ஊடகவியலாளர் சா.ரவீந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசழிப்பு விழா புதன் கிழமை (23) மாலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு மிகவும் ஆக்குரோசமான முறையில் தனது கருத்தைத் தெரிவித்தார் இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
அரசியல் என்றால் மக்களுக்கு அபிவிருத்தியைச் செய்யுங்கள், பாருங்கள் எத்தனையோ வீதிகள் குன்றும் குளியுமாகக் கட்சியளிக்கின்றது. பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், கத்துகிறார்கள், என்ன செய்கிறார்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இன்றும் பிரதேச சபையாகவே இயங்கு கின்றது. அது ஒரு நகரசபையாக மாற்றமடையவில்லை.
அக்கரைப்பற்றில் பிரதேச சபை ஒன்று இருக்கும்போது மற்றுமொரு நகரசபையைக் கொண்டுவந்தர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவரால் முடிந்தால் ஏன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நகரசபையாக மாற்றமுடியாது. எனவே பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியிடம் நான் கூறிக் கொள்கின்றேன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நகரசபையாக மாற்றுங்கள்.
எனக்கு தற்போது அரசியல் வாதிகளைப் பிடிக்குதில்லை, அவர்கள் செய்யும் விடையங்கள் எனக்குப் பிடிக்குதில்லை ஆரையம்பதி வைத்தியசாலையில் அம்பியுலான்ஸ் வண்டியில்லை, மருந்து இல்லை, ஏன் அரசியல்வாதிகளெல்லாம் தூங்குகின்றார்களா?
எனவே பிரதியமை;சசர் முன்பள்ளி ஆரிசியர்களுக்கு மாத்தந்தம் ஒரு கொடுப்பனைவை வழங்கும் திட்டத்தை அமுலடுத்த வேண்டும், மட்டக்களப்பு மாவட்ட அரசவாங்க அதிபரை மாற்றுவதும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை மாற்றுவதும், அரசியல் அல்ல. எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment