6 Dec 2015

களுதாவளை வீனஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா

SHARE
மட்டக்களப்பு  - களுதாவளை வீனஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா கடந்த வெள்ளிக்கிழமை (04) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

வைக்றோ எனும் அரச சார்பற்ற அமைப்பின் அனுசரணையில் கிராம அபிவிருத்திச் சங்னத்தின் தலைவர் ரி. கேளதமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனசுந்தரம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.வேல்வேந்தன், மற்றும் , பெற்றார்கள், மாணவர்கள், உட்பட பலர் கலந்து  கொண்டிருந்தனர்.
வீனஸ் பாலர்பாடசாலை மாணவர்களின் ஆடல் பாடல், உட்பட்ட கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





















SHARE

Author: verified_user

0 Comments: