3 Dec 2015

ம.தெ.எ.பற்றில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சம்மேளனம் அங்குரார்ப்பண நிகழ்வு

SHARE
ம.தெ.எ.பற்று, களுவாஞ்சிகுடியில் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய சம்மேளனம் இன்று ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம், மற்றும் உதவிப் பிரதேச செயலாளர், மற்றும் அபிவிருத்தி உத்தியேகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த  சம்மேளனத்தின் நிரந்தர பதவிவழி தலைவராக பிரதேச செயலாளரே திகழ்வதுடன், மற்றும்  இப்பிரதேசத்தில் உள்ள  முக்கிய அரச, மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இதில் அங்கத்துவம் வகிப்பார்கள். 







SHARE

Author: verified_user

0 Comments: