அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்; பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்திக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களை இன்று இன்று வெள்ளிக் கிழமை(18) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் சுபீட்சத்திற்கும், சக்தி உற்பத்திக்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமான எதிர்கால உட்கட்டமைப்பு செயற்றிட்டங்கள் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க தேர்ச்சி என்பன குறித்து தூதுவர் கேஷப் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கலந்துரையாடினார்.
இன அல்லது மத வேற்றுமைகள் இன்றி அனைவருக்கும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகளுடன் ஐக்கியமான, சமாதானமான மற்றும் நல்லிணக்கமான இலங்கைக்கான இலங்கை வாக்காளர்களின் தொலைநோக்கிற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என தூதுவர் கேஷப் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment