(இ.சுதா)
கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஹற்றன் நெஷனல் வங்கியினால் இலகு தவணை அடிப்படையில் வாழ்வாதாரக் கடன் வழங்கும் நிகழ்வு சனிக் கிமை (12) துறைநீலாவணை தாய் சேய் சிகிச்சை நிலைய மண்டபத்தில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் ஹற்றன் நெஷனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.ஜெகராஜா மற்றும் மருதமுனைக் கிளை முகாமையாளர் எம்.எச்.எம்.பைறுஸ் திட்ட நிறைவேற்று உத்தியோகத்தர் என்.கோகுலதாசன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களான தி.கோகுலராஜ் இ.வை.கனகசபை உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது துறைநீலாவணை முல்லை மாதர் சங்கத்தினைச் சேர்ந்த 27 பேருக்கு தலா ஒரு இலட்சம் வரையிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment