3 Nov 2015

பசுமையான சூழலை பாதுகாக்க வேண்டிய அனைத்துப் பொறுப்புக்களும் எம்மைச் சார்ந்தாகும்.

SHARE
(இ.சுதா)

அங்கவீனமான குழந்தைகள் அதிகளவில் பிறப்பதற்கு இரசாயனக்குண்டுகள் வித்திட்டுள்மை வேதனை தரக்கூடிய விடயமாகும்
யுத்தப் போர் முனையில் குறிப்பாக வட பகுதியில் வீசப்பட்ட நஞ்சுக் குண்டுகளினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையிலும் அதன் தாக்கம் காரணமாக தற்போது அங்கவீனமான குழந்தைகள் அதிகளவில் பிறப்பதற்கும், இரசாயனக்குண்டுகள் வித்திட்டுள்மை வேதனை தரக்கூடிய விடயமாகும். இவ்வாறான நிலைமைகளிவிருந்து விடுபட்டு பசுமையான சூழலை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் குறிப்பிட்டார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுசணையுடன் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த தேசிய மரநடுகை நிகழ்வு திங்கட் கிழமை (02) பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது இதில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்குறிப்பிடுகையில்…

பண்டைய கலை கலாசாரங்களை முழுமையாக மறந்து நவீன உலகிற்கு ஏற்ற வகையில் நாம் மாறியுள்ளமையினால் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல காரணங்களினால் சூழல் மாசடைகின்ற போதிலும் பசுமையான சூழலை  பாதுகாக்க வேண்டிய அனைத்துப் பொறுப்புக்களும் எம்மைச் சார்ந்தாகும். 

சிங்கப்பூர் போன்று இலங்கையினை ஒரு அழகிய நாடாக மாற்ற முடியும் அதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாக வேண்டும். எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக மனித உயிர்கள் மாத்திரமல்லாது யுத்தம் காரணமாக எம்மைச் சார்ந்துள்ள சூழலும் பாரியளவிலான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளன.  அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: