சர்வதேச சிக்கன தினத்தினை முன்னிட்டு சிறுவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விழாவொன்று நேற்று (30) வெள்ளிக்கிழமை பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் பி.கே.தர்மதாச, பிராந்திய முகாமையாளர் வி.கே.எம்.எஸ்.குமார, மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், கிளை முகாமையாளர்கள் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்டத்திலுள்ள வங்கியின் 7 கிளைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 250 சிறுவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதில், பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்கினைப் பேணும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 24 பேருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், ரூபா 50 ஆயிரத்துக்கு மேல் வைப்பிலிட்ட 8 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. மாவட்ட மட்டத்தில் வங்கியினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 12 பேருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அதே நேரம், தமது கிளைகளில் அதிக சேமிப்பினை மேற்கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அதே நேரம், தமது கிளைகளில் அதிக சேமிப்பினை மேற்கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment