மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வீதிகளிலும், கிராமங்களிங்களிலும், தேங்கியுள்ள மழை நீரினை வெட்டி வழிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர்கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
தற்போது பெய்துவரும் மழை காரணமாக மழைநீர் வழிந்தோட முடியாமல் இப்பிரதேசத்திலுள்ள பல வீதிகளிலும். மக்கள் குடியிருப்புக்களிலும், காணப்படுகின்றன.
இவ்வாறு மழைநீர் தோங்கிநிற்கும் களுதாவளை, ஓந்தச்சிமடம், எருவில், களுவாஞ்சிகுடி, போன்ற பல கிராமங்களுக்கு இன்று திங்கட் கிழமை (23) பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மழை நிர் தேங்கி நிற்பதனால் மக்கள் பல அசௌகரியங்கைள எதிர் கொண்டு வருகின்றனர், நோய்களும் பரவக்கூடும். எனவே இன்றிலிருந்து இவ்வாறு தேங்கிக்கிடக்கும் மழை நீரினை பிரதேச சபை, பிரதேச செயலாகம், சுகாதாரத்துறையினருடனும் இணைந்து வெட்டி வழிந்தோடச் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment