1 Nov 2015

மாவடி ஆறு அணைக்கட்டு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு

SHARE
மண்முனை மேற்குப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி ஆறு அணைக்கட்டு வியாழக்கிழமை காலை  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி றொபின் முட்டேயினால் திறந்து வைக்கப்பட்டது.
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஊடாக அவுஸ்திரேலிய உதவியின் நிதியில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது.
5.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த அணைக்கட்டின் மூலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் இலுப்படிச்சேனை பிரதேசத்தின் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்களில் வேளாண்மை செய்கை பண்ணக் கூடியதாக இருப்பதுடன், இப்பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பும் தவிர்க்கப்படும்.

நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியிலாளர் என் சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கவுன்சிலர், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி குஸ்ப்பி குரோசிற்றி, மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

6 கதவுகளைக் கொண்டதாக 12 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவடி ஆறு அணைக்கட்டின் ஊடாக தாந்தாமலை, கண்டியனாறு, நல்லதண்ணியோடை, அடைச்சகல் ஆகிய குளங்களின் வடிச்சல்களின் நீர் வேறு பிரதேசங்களுக்கு செல்கிறது.

அணைக்கட்டினைத்திறந்து வைத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி றொபின் முட்டே அப்பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி றொபின் முட்டே மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

Aus High batti 2
Aus batti 3
Aus batti 4
BPK/LDA
SHARE

Author: verified_user

0 Comments: