8 Nov 2015

கிழக்கு முதலமைச்சரினால் 48 பயனாளிகளுக்கு வீடமைப்புக்கான நிதி வழங்கிவைப்பு

SHARE
கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையின் 2015-  (PSDG ) பிஎஸ்.டிஜி  நிதியில் இருந்து கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மூலம் 48 பயனாளிகளுக்கு 100000 ரூபாய்கள் வீதம் வழங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 40000 ரூபாய்கள் வீதம் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் வெள்ளிக்கிழமை மாலை (06)  கிழக்கு மாகாணசகையின்  கேட்போர் கூடத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக 40000 ரூபாய்களும் அதன் பின்னர் 20000 ரூபாய்களும் மீண்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மாகாணசபை உறுப்பினர் துரை ரட்ணம் ஆகியோரும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்









SHARE

Author: verified_user

0 Comments: