9 Oct 2015

நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் கிடைக்காத பட்டதாரிகள் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்,)
பொதுநிருவாக அமைச்சினால் ஒரு சில தினங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கு கிழக்குமாகாண பட்டதாரிகள் சிலருக்கு கடிதம்; அனுப்பிவைக்கப்பட்டது.  எனினும் சிலருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இந்தவிடயம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பொதுநிருவாக அமைச்சின் செயலாளரை சந்தித்தனர். இதன்போது தற்பொழுது  நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருக்கும் பட்டதாரிகள் 31.03.2012 ஆண்டிற்கு முன்னர் பட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் மாத்திரம் ஆனால் இதே வருடத்தில் அடுத்தடுத்த மாதம் வெளியானவர்களின் நிலைகுறித்தும் மற்றும் 2013, 2014 ஆம் ஆண்டில் பட்டத்தை பூர்த்தி செய்து வெளியானவர்கள் தொடர்பிலும் உடனடிக் கவனம் செலுத்தி அவர்களையும் அரசதுறைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கையினை முன்வைத்தார் இதனை ஏற்றுக் கொண்ட பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்ட நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏனையவர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைக்கப்படும் என்று தெரிவித்தார். 









SHARE

Author: verified_user

0 Comments: