(இ.சுதா)
வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு - பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21ம் திகதி புதன் கிழமை காலை நடை பெறும் தீ மிதிப்புடன் கூடிய சம்பூரண கிரியையுடன் ஆலய உற்சவமானது நிறைவு பெறவுள்ளது.
கிரியா கால நிகழ்வுகளாக 15ம் திகதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளப்பண்ணல் நடைபெறுவதுடன் அதனைத் தொடர்ந்து திரு விளக்குப்பூசை இடம்றும்.வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு - பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21ம் திகதி புதன் கிழமை காலை நடை பெறும் தீ மிதிப்புடன் கூடிய சம்பூரண கிரியையுடன் ஆலய உற்சவமானது நிறைவு பெறவுள்ளது.
17ம் திகதி அம்மன் ஊர்வலமும், 18ம் திகதி காலை இடம் பெறவுள்ள விசேட பூசையினைத் தொடர்ந்து, வீரகம்பம் வெட்டும் நிகழ்வு இடம் பெறும்.
19ம் திகதி இரவு ஊர் காவல் திருவிழா இடம்பெறுவதுடன், மறுநாள் காலை நோர்ப்பு நெல் எடுத்தல், நெல் குற்றுதல், நோர்ப்புக் கட்டுதல் நிகழ்வினைத் தொடர்ந்து அபிசேக பூசை ஆராதனைகள் தீ வளர்த்தல் நிகழ்வும் இடம் பெறும்.
கிரியைகள் யாவும் விசேட கிரியா கால குரு விஸ்வப்பிரமம ஸ்ரீ ஏ.குமாரலிங்கக் குருக்கள் தலைமையில் நடை பெறவுள்ளதுடன் சக்தி விழாக் காலங்களில் தினமும் மகேசுர பூசையும் அன்னதான நிகழ்வுகளும் ஆன்மீகச் சொற்பொழ்pவுகளும் இடம் பெறவுள்ளதாக ஆலயத்தலைவர் சி.பேரின்ராசா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment