மக்களைத் தாக்கி வந்த காடுட்டு யானைகளில் ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு ஹபரணையிலுள்ள யானைகள் சரணாலயத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு மக்களையும், சொத்துக்களையும் தாக்கிய அழித்துவந்த தனியன் காட்டு யானை ஒன்றை பிடித்து ஹபரணையிலுள்ள யானைகள் சரணாலயத்திற்குக் கொண்டுவிடும் நடவடிக்கை சனிக் சனிழமை (10) போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் மண்டூர் பகுதியில் இடம்பெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச சபை, வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வன விலங்கு இலாகா, மட்டக்களப்பு கச்சேரி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும், இராணுவத்தினர், போன்ற அரச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் பொதுக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பிலுள்ள பற்றைக் காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்நிலையில் காட்டு யானைகளைப் பிடித்துக் கொண்டு சரணாயலத்தில் விடுவதற்காக அனுரதபுரத்திலிருந்து வந்த விசேட குழுவின் மூலம் மக்களைத் தாக்கும் காட்டுயானைகளைப் பிடித்துக் கொண்டு ஹபரணையிலுள்ள யானைகள் சரணாலயத்திற்குக் கொண்டுவிடும் நடவடிக்கை முன்நெடுக்கப் பட்டுள்ளதாக இதன்போது வருதை தந்திருந்த பெதுமக்களிடம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment