வருடாவருடம் வெள்ளத்தினால் சேதமடைந்துவரும் வெல்லாவெளி - வேத்துச்சேனை பிரதான வீதி தற்போது புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு செவ்வாய்க்கிழமை (06) மாலை திறந்து வைக்கப்பட்டது.
அவுஸ்ரேலியன் எயிட்டின் 7 மில்லியன் ரூபாய் நதியொதுக்கீட்டில் ஐ.ஓ.எம். நிறுவனத்தினால் இவ்வீதி புணரமைக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்வீதி திறப்புவிழா நிகழ்வில் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் திருமதி அமலா, போரதீவுப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.குபேரன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment