30 Oct 2015

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்ட 8 கைதிகள் கூரைமீதேறி போராட்டம்.

SHARE
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்ட 8 கைதிகள் வெள்ளிக் கிழமை (30) மாலையிலிருந்து சிறைச்சாலையின் கூரையின் மீதேறி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
தமக்கு சிறைச்சாலையில் பல்வேறு துன்பங்கள்; விளைவிக்கப் படுவதாகவும், தம்மைப் பார்க்கவரும் உறவினர்களும், பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து வருவதாகவும் , தமக்கு உரிய நீதி வேண்டும் எனக்கோரியே இப்போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகள், வருகின்றனர்

இந்நிலையில் இவ்வாறு போராட்டம் நடாத்திவரும் சிறைக் கைத்திகள் அரசியல் கைத்திகள் அல்ல இவர்கள் அனைவரும் களவு, கப்பம் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடபட்டவர்கள் என மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிக்ள இதன்போது தெரிவித்தனர்.

இதேவேளை சிறைச்சாலையைச்சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் கூரையிலிருக்கும் கைதிகளை கீழிறங்க வைப்பதற்கான நடவடிக்கைககளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.




SHARE

Author: verified_user

0 Comments: