13 Oct 2015

மினி சூறாவளியினால் 7 வீடுகள் சேதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிதேசத்தின் பன்சேனைக் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை எனும் கிராமத்தில் வெள்ளிக் கிழமை (09) மாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் 7 வீடுகள், பாதிக்கப்பபட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை தினத்தன்று இக்குறித்த வீடுகளிலிருந்த மக்கள் ஆலய வழிபாட்டுக்குச் சென்றதன் காரணமாக இம்மினிச் சூறாவளித்தாக்கத்தில் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்புக்கள் எற்படவில்லை.

இருந்தபோலிதிம் இதனால் 4 வீடுகள் முழு அளவிலும், 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இக்கிராமத்தின் கிராமசேவை உத்தியோகஸ்தர் இ.பிரதீபன் தெரிவித்தார்.

மினிசூறாவளியின் தாக்கதினால் பாதிப்படைந்த மக்களை அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.









SHARE

Author: verified_user

0 Comments: