13 Oct 2015

மட்டக்களப்பின் 2015ம் ஆண்டுக்கான தரம் 05 மாணவர்களின் புலமைப்பரீட்சைக்கான பெறுபேறுகள்

SHARE
(க.விஜி, இ.சுதா)

2015ம் ஆண்டுக்கான தரம் 05 மாணவர்களின் புலமைப்பரீட்சைக்கான பெறுபேறுகள் புதன்கிழமை (07) வெளியாகியுள்ளது. இப்பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளிர் பாடசாலை மாணவியான பத்மசுதன் தக்ஷினியா என்ற மாணவி 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுள்ளதாக திருமதி.ராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.
இவர் பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா டெலிகொம் பிராந்திய பொறியியலாளராக கடமையாற்றும் பத்மசுதன் அவர்களினதும், காத்தான்குடி ஆதரா வைத்தியசாலையின் வைத்தியராக கடமையாற்றும் சர்வானந்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும் ஆவார். இப்பாடசாலையில் புலமைப்பரீட்சை தோற்றியவர்களில் 50 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக பெற்று இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் மொகமட் ஜவாஹிர் அகமட் முஸ்ராப் என்ற மாணவன் 189 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 03ம் இடத்தை தட்டிக்கொண்டார். இப்பாடசாலையில் இருந்து 95 மாணவர்கள் தோற்றியதில் 16 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக பெற்று சித்தியடைந்துள்ளனர் என மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி. விமல்ராஜ் தெரிவித்தார்.

கல்லடி விவேகானந்த மகளிர் பாடசாலையில் தோற்றியவர்களிலிருந்து 08பேர் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார். இதேவேளை 02ம் இடத்தினை வாழைச்சேனை பேத்தளை மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக அறிய முடிகின்றது.






SHARE

Author: verified_user

0 Comments: