14 Sept 2015

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் நிதி அறவிடமுடியாத நிலுவையாகவுள்ளது - நடராசா

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் நிதி அறவிடமுடியாத நிலுவையாகவுள்ளது. இதனை இதுவரை காலமும் அறவிடமலுள்ளமை பாரிய குற்றமாகும். இது மக்களின் பணமாகும், இதனை மக்களின் அபிவிருத்திகளுக்கு இச்சபையினூடாக உரிய முறையில் செலவு செய்யப்பட வேண்டும். இவ்வற்றினை இச்சபை விரைவில் அறவீடு செய்ய வேண்டும்.
என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் நிலைப்பாடு தொடர்பில் மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் தொடரல்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது விடையமாக அவர் மேலும் தெரிவிக்கiயில்….

கடந்த வியாழக்கிழமை (10) மேற்படி பிரதேச சபைக்கு விஜயம் செய்து அங்குள் நிலமைகளை அவதானித்தேன் இதன் பின்னர்தான் இப்பிரதேச சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் தெரியவந்தன. 

இப்பிரதேச சபைக்குச் சொந்தமான கனரகவாகனம் ஒன்று கடந்த 2 வருடங்களாக இச்சபைக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த, இந்தச் சபை நிருவாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, 

இப்பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைச் செயற்பாடுகள் மக்களுக்குப் போதமானதாக இல்லை, இங்கு ஆளணி, பற்றாகுறை நிலவுகின்றன, கழிவகற்றும் வாகனங்கள் குறைவாகவுள்ளன. 


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சுமார் 63000 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள், 42000 இற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளார்கள், அந்த வகையில் தற்போதைய நிலையில் இந்த சபையினால் இங்குள்ள மக்களுக்கு உரிய சேவையை வழங்குதில் குறைபாடுகள் உள்ளன. எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நகரசபையாக தரமுயர்த்த வேண்டும். 

இப்பிரதேச்தில் அதிகளவு வீதிகள் பழுதடைந்து கிடக்கின்றன, வெள்ள அனர்த, காலங்களில் மக்கள் வீதிகளால் மக்கள், செல்ல முடியாதுள்ளன, மதகுகள் பல அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள பல வீதிகள் பிரதேச சபைக்குச் சொந்தமானதா, வீதி அபிவிருத்தி திணைககளத்திற்குச் சொந்தாமானதா அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதான எனவும் இனங்காணப்படாமலுள்ளன. 

இப்பிரதேசத்தில் வீதி விளக்குகள் இன்மையினால் இரவில் பயணிப்போர் பலத்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றாரகள், வீதி விளங்குகளை பொருத்துவது தொடர்பில் பிரதேச சபையிடம் கேட்டால், அதற்கு மின்சார சபைதான் பொறுப்பு, என தெரிவிக்கின்றார்கள், மின்சார சபையிடம் கேட்டால், பிரதேச சபைதான் பொறுத்து என மாறி, மாறி கருத்து தெரிவிக்கின்றார்கள். 

கடந்த 2014 ஆம் ஆண்டு நான் இப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மின்சாரம் வழங்குவதற்கு  ஒரு தொகைப் பணம், ஒதுக்கீடு செய்திந்தேன். துரதிஸ்ட்டம் இன்றுவரை அந்த கிராமத்திற்கு மின்சாரம் ஒழங்கப்பட வில்லை.

இந்த நிலையில்தான் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இயங்கி வருகின்றது.  கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களும் பங்காளிகளாகவுள்ளார்கள் என்ற அடிப்படையிலும் இப்பிரச்சனைகள் யாவற்றையும் மிகவும் தெழிவாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சiயில் காணப்டும் பெரும்பாலான தேவைகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் நிவர்த்தி செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தம்மிடம், உறுதியளிதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: