நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் சந்தேகம் காணப்படுவதால், அதனை மீண்டும் எண்ணுவதற்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கட்சிக்கும், தமது வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அக்கறைப்பற்றில் இடம்பெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனை நாம் தோல்வியாக பார்க்கவில்லை.
எமது அம்பாறைக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வாக்குகளை எண்ணும் வேளையில் உறுதிபடுத்தப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் அது எவ்வாறு மாறியது என்பது தொடர்பில் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நாம் மீண்டும் இந்த வாக்குகளை எண்ணுவதற்கான நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கையினை கோரவுள்ளோம். இதற்காக எமது சட்டத்தரணிகள் தயாராகி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment