2 Sept 2015

தரமான சேவைகள் வழங்கும் நிலையமாக மாவட்ட செயலகத்தை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல மக்களுக்கும் தரமான சேவையை வழங்கும் நிலையமாக மாவட்ட செயலகத்தை மாற்றியமைக்க அனைத்து தர உத்தியோகத்தர்களது பங்களிப்பும் தேவைப்படுவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உற்பத்திதிறன் தொடர்பான கூட்டத்தின் போது தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெறுகின்ற அரச ஊழியர்களாகிய நாம் அனைவரும் சேவை நாடிவருகின்ற மக்களின் தேவைகளை இணங்கண்டு அன்பான முறையில் உரையாடி முடியுமானவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இன்று அரச ஊழியர்களின் மாதாந்த வேதனத்திற்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிடுகின்றது. இலங்கையில் 20 பது பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அரச ஊழியர் காணப்படுகின்றனர். சரியான முறையில் அரச அதிகாரிகள் சேவை செய்யாவிடின் பொதுமக்கள் குறித்த அதிகாரிகளுக்கெதிராக செயற்படவாய்ப்பு காணப்படுகின்றது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 5 எஸ் திட்டத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அதற்கு அனைத்து ஊழியர்ளும் பங்களிப்பு வழங்குவது அவசியமாகும் என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ரசா 5 எஸ் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வொன்றையும் இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நிகழ்த்தினார்.
good service

SHARE

Author: verified_user

0 Comments: