காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பான செயலமர்வு திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை கிளை சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.பிரபாகர்,காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்,உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, பிரதேசத்திலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது,சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது தொழிலை விருத்தி செய்யும் நோக்குடன் பிரதேசத்திலுள்ள வங்கிகளினூடாக கடன் உதவி பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment