2 Sept 2015

வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள   மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கடித மூலம் அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் தரவுகளை மூன்று மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர்கள் மூலம் திரட்டி, அத்தரவுகளை கிழக்கு மாகாண முதலமைச்சுக் காரியாலத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். -
SHARE

Author: verified_user

0 Comments: