15 Sept 2015

நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை விவசாயிகள் விசனம்

SHARE

திருகோணமலை மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகாதிவுள்வௌ,பன்குளம்,தெவனி பியவர நொச்சிக்குளம் பகுதி விவசாயிகளின் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மொறவௌ பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் பிரிவுக்கு இரண்டு சிறிய களஞ்சியசாலைகள் காணப்படுவதாகவும் அதில் ஒருவர் மாத்திரம் கடமையாற்றி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் கூறுகையில்,திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.

மொறவௌ பிரதேசத்தில் மேலதிக நெல்லை களஞ்சியப்படுத்த விவசாய திணைக்களத்தின் களஞ்சியசாலைகளை பெற்றுள்ளோம். இதேவேளை,அனுமதி கிடைத்தவுடன் மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகளின் நெல்லை பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: