27 Sept 2015

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியை வரவேற்கும் நிகழ்வுகள்

SHARE
கிராமிய பொருளாதார அபிவிருதி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியை வரவேற்கும் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை (27) மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியில் நடைபெற்றது. 
அந்த வகையில், களுவாஞ்சிகுடியில் முகாமை ஆலய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் களுவாஞ்சிகுடி சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில்,  நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், உட்பட கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் காலந்து கொண்டிந்தனர்.

இதேவேளை மேற்படி பிரதியமைச்சரை வரவேற்கும் நிகழ்வு, இன்றய தினம், திக்கோடை, மற்றும், காக்காச்சுவட்டை,  போன்ற இடங்களிலும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: