மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கு ஒவ்வொரு வெலைத்திட்டத்திற்காக ஒரு கிராமத்திற்கு 10 லெட்சம் வீதம் ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றைப் பயன்படுதி உரிய கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான கூட்டமொன்று வெள்ளிக் கிழமை (25) போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளும் காலந்து கொண்டிருந்தனர்.
இருந்த போதிலும் இந்நிகழ்வுகளையும், இப்பிரதேச அபிவிருதிகளையும், வெளியுலகிற்குக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட வில்லை. என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரதீவுப் பற்றுப் பிரதேச மக்கள் நலனில் என்றென்றும் அக்கறை செலுத்தி வருவதில் ஊடகவியலாளர்களின் பங்கும், அளப்பெரியதாக இருந்து வரும் இந்நிலையில் இவ்வாறான அபிவிருத்திக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்காமை கவலையளிப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment