7 Sept 2015

மட்டக்களபு- கொழும்பு இடையிலான புகையிரத சேவையில் நேரமாற்றம்.

SHARE
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதியிலிருந்து புகையிரத திணைக்கள துணை இயக்க அத்தியட்சரின் 585 C சுற்று நிருபத்திற்கமைய மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத சேவை நேரமானது மாற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பிலிருந்து காலை 7.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட உதயதேவி புகையிரதம் காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரத நேரம் 5.20 ஆக மாற்றப்பட்டுள்ளதுடன் இப் புகையிரதம் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
இரவு 8.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரதம் இரவு 8.15மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படுவதுடன் இப் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.53 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
இதேவேளை காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திவரை செல்லும் புகையிரதத்தின் நேரம் காலை 10.15 மணியாக மாற்றப்பட்டுள்ளதுடன் இப் புகையிரதம் மாலை 5.38 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
அத்துடன் கொழும்பிலிருந்து மாலை 7.15 மணிக்கு புறப்பட்ட பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரதம் மாலை 7.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மேலும் கொழும்பிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்ட உதயதேவி புகையிரதம் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 9.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகைவண்டியின் நேரம் 9.30 மணியாக மாற்றப்பட்டு இந்த புகையிரதம் மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இவ்வாறு மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக பிரதான புகையிரத நிலைய அதிபர் A.L.M அலிபா தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: