கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் அப்பகுதியில்; வாழ்கின்ற தமிழ் மக்கள் பாதிப்படையக் கூடாது. அரசியல்வாதிகள் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நேர்மையாக செயற்படுத்த வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
கல்முனை அபிவிருத்தி சம்பந்தமாக அவர் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கல்முனை புதிய நகரை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு முன்னர் தமிழ் மக்களுடனும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனும்; கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இவ்வாறான நிலையில் நடந்தால் இன ஐக்கியம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது' என்றார்.
0 Comments:
Post a Comment