களுவாஞ்சிகுடி பிரதேச சுகாகாதார வைத்திய அலுவலகத்தினால், எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நினழ்வொன்று நேற்று புதன் கிழமை (2) மட்டக்களப்பு –களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
களுதாவளைப் பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் மு.கிருபாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடிப் பரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார், இப்பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.திருச்செல்வம் உட்பட, ஏனைய பொதுச் சுகாதார பரிசோர்களும் கலந்து கொண்டு கருத்தக்களை வழங்கினர்.
இதில், களுதாவளைப் பகுதியை சேர்ந்த கிராம அபிருத்திச் சங்கத்தினர், மாதர் கிராம அபிருத்திச் சங்கத்தினர் அடங்கலான ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எலிக்காச்சல் பரவும் முறைகள், எலிகளைக் கட்டுப்படுத்துதல், எலிக்காய்சலின் அறிகுறிகள், சிகிச்சைபெறும் முறைகள், பாதுகாப்பு முறைகள் தொடர்பாக இதன்போது விளக்கமிளிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment