2 Sept 2015

சின்னவத்தை இடை நடுவில் கைவிடப் பட்டுள்ள வாசிகசாலைக் கட்டடத்தை உடன் புரமைப்புச் செய்து பாவனைக்கு விடவேண்டும்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைககுட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப் பட்டுள்ள வாசிகசாலைக் கட்டடத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் புரமைப்புச் செய்து மக்கள் பாவனைக்கு விடவேண்டும் என சின்னவத்தைக் கிராம அபிவிருத்திச் சங்கனத்தின் சார்பாக அதன் தலைவர் கோ.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தயட்டக் கிருள திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில், காடு வளர்ந்துபோய் கவனிப்பாரற்று இந்த வாசிகசாலைக் கட்டம் காணப்பட்டு வருகின்றது. இந்த வாசிகசாலை அமைய்பெறும் பட்சத்தில் எமது கிராம பொதுமக்கள் மாத்திரமதின்றி, பாடசாலை மாணவர்களுக்கும் பெரும் வாய்பாக அமையும்.

எனவே மிகவிரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இக்குறித்த விடையத்தில் கவனம் செலுத்தி விசிகசாலையை உடன் புணரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சின்னவத்தைக் கிராமத்தில், தயட்டக்கிருள திட்டத்தின் கீழ் வாசிகசாலை ஒன்று அமைக்கப்பட்டு பூர்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. தயட்டக்கிருள திட்டத்தின் கீழ் எமது பிரதேசத்தில் பூர்தி செய்ப்படாமலுள்ள திட்டங்கள் தொடர்பில் நாம் சம்மந்தப்பட்ட, அமைசுக்கு அறிவித்துள்ளோம், அந்த வகையில் சின்னவத்தை வாசிகசாலையும், அதில் அடங்குகின்றது.

நாம் அனுப்பிய தகவல்களுக்கமைய இவ்வாசிகசாலைக் கட்டடத்தை பூர்தி செய்வதற்குரிய நிதிஒதுக்கீடு உரிய அமைச்சிலிருந்து கிடைக்கும் என எதிர் பார்க்கின்றோம், அது கிடைத்ததும் இவ்வாசிகசாலைக் கட்டடத்தைப் ப+ர்தி செய்து மக்கள் பாவனைக்கு விடப்படும், என இவ்விடையம் குறித்து போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரனிடம் கேட்டபோது தெரிவித்தார். 

எது எவ்வாறு அமைந்தாலும் மிகவிரைவில் சின்னவத்தைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வாசிகசாலைக் கட்டடத்தை பூர்த்தி செய்து கொடுக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துரிதகதியில் செயற்பட வேண்டும் என்பதையே அப்பகுதிவாழ் பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: