கிழக்கு மாகாண தமிழ்,சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
இதில்,மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தேசமான்ய ஏ.பி.கமால்தீன்,செயலாளர் பி.ஏச்.பியதாச உயர் சபை உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எல்.றபாய்தீன்,அம்பாறை மாவட்ட ஆசிரியர் சங்க ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பூஜா ஹொரன பஞ்ஞாரத்ன ஹிமி மற்றும் மாவட்ட இணைப்பாளர் ஜி.இலுக்கொட செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment