“பிள்ளைகளைக்காப்போம்” என்னும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நாடெங்கிலும் நடாத்தப்பட்டுவருகின்றன.;
முட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
வெல்லாவெளி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் சி.அருளானந்தம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி ஜே.கலாவதி,வெல்லாவெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு கோரி பாடசாலை மாணவர்களின் கவன ஈர்ப்பு பேரணியும் இதன்போது நடைபெற்றது.
அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்குமாறு கோரும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் வாகனங்களில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
0 Comments:
Post a Comment