ஊடகவியலாளர்கள் எமது வளம். அந்த வளத்தை சரியாக பயன்படுத்தினால் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனீ குணதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) நடைபெற்ற 'உதவும் கரங்கள் உயிர்காக்கும்' என்ற தொனிப்பொருளிலான உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் கருத்தரங்கிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், காலத்துக்கு பொருத்தமான கருத்தரங்கொன்றில் இன்று நாம் பங்குகொண்டுள்ளோம். தௌிவுபடுத்தல், தற்கொலையை தடுத்தல், மற்றும் வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளுதல் என்பவற்றை இலங்கையில் மட்டுமல்ல, உலகிற்கே கொண்டு செல்ல ஊடகவியலாளர்களாகிய உங்களால் மட்டுமே முடியும்.
ஊடகம் தொடர்பான பொறுப்பு உங்களிடமே உள்ளது. தற்கொலையை மிகவும் கவரும் வகையில் ஊடகங்களில் வௌியிடும் பல்வேறு சந்தர்ப்பங்களை நாங்கள் காண்கிறோம். கவரும் வகையில் வௌியிடும் செய்தியாக தற்கொலையை பார்க்க முடியுமா? மிகவும் கஸ்டப்பட்டு பெற்றுகொண்ட வாழ்க்கையை அனுபவிப்பத்து தொடர்பில் நாம் செய்தி வௌியிடுவதில்லையா?
வாழ்க்யைில் பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்கவேண்டி வருகிறது. அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணியிருக்கலாம். ஆனால் அது பிரச்சினைக்கு தீர்வாகுமா? வாழ்வின் அழகை ரசிக்கக்கூடிய மாற்றுவழிகளை பற்றி நாம் மக்களுக்கு தௌிவுபடுத்தவேண்டும்.
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எமக்கு பல்வேறு வழிகள் உண்டு. இது தொடர்பில் மக்களை தௌிவுபடுத்துவது மிக முக்கிய கடமையாகும். அதனை நாம் நிறைவேற்றவேண்டும். துறையின் கௌரவத்தை பாதுகாத்து, சரியான கொள்கையுடன், தொழில் தர்மத்துடன் செய்திகளை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி முடியுமாக இருந்தால் அதுதான் முக்கியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் உளநல விசேட நிபுணருமான டொக்டர் நீல் பெர்ணாண்டோ, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டி.டி.கே ஜயந்த, உளவியல் சுகாதார பிரிவின் பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி உட்பட சுகாதார அமைச்சின் வைத்தியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சின் உளநல பிரிவு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

0 Comments:
Post a Comment