மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் வாகரைப் பிரதேசத்திலுள்ள புதூர் கிராமத்தில் கட்சி ஆதரவாளர் தலைமையிலும், கதிவெளி பத்திரகாளி அம்மன் ஆலய மைதானத்தில் ஆலய தலைவர் எஸ் குணம் தலைமையிலும், புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் ஆலய தலைவர் சொ.மதன் தலைமையிலும், பால்ச்சேனை கிராமத்தில் கட்சி ஆதரவாளர் எஸ்.மனோகரன் தலைமையிலும், கட்டுமுறிவுக்குளம் கிராமம், ஆண்டான்குளம் கிராமங்களின் கட்சி ஆதரவாளர் தலைமையிலும், அம்பந்தனாவெளி கிராமத்தில் கட்சி ஆதரவாளர் எஸ்.பாஸ்கரன் தலைமையிலும், புளியங்கண்டலடி மாரியம்மன் ஆலயத்தில் ஆலய தலைவர் தலையிலும்; பாராளுமன்ற உறுப்பினரை ஆதரித்து நிகழ்வுகள் இடம்பெற்றது.
இவ் வரவேற்பு நிகழ்வுகளில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமாக வரவேற்றனர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மக்களுடன் தனது வெற்றியை கொண்டாடியதுடன், மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment