24 Aug 2015

கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு [ திங்கட்கிழமை

SHARE

மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டவான் கடலில், பொழுதுபோக்கிற்காக கடலில் செலுத்தும் மோட்டார் வண்டியினை அனுபவம் இன்றி செலுத்தியதன் காரணமாக இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை வட்டவானைச் சேர்ந்த ஜீவரெட்ணம் அஜித்குமார் வயது (19) என்ற இளைஞனே நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இவரது சடலத்தினை தேடும் பணியில்  கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் சுழியோடிகள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சடலம் கண்டு பிடிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் வட்டவானில் உள்ள சுற்றுலா விடுதியில் பணியாளராக கடமையாற்றி வந்துள்ளளார்.
இந்த நிலையில், குறித்த இயந்திரமானது கடந்த சில நாட்களுக்கு முன்பே மேற்படி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விற்பதற்காக, சுற்றுலா விடுதி உரிமையாளரினால் தருவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம்; ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: