17 Aug 2015

விபத்தில் படுகாயம்

SHARE
தியாவட்டவான் அரபா வித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில்,  இருவர் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியிருந்து வாழைச்சேனை நோக்கி வந்த எல்ப் ரக வாகனமும் மோட்டார்  சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்தாகவும் மோட்டார்; சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவரின் நிலை  கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: