அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை 17500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருகோணமலையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை பொலிஸாரால் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி ரி.சரவணராசா 17500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment