3 Mar 2026

கிழக்கு ஊடகவியாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இன ஐக்கிய இப்தார் நிகழ்வு.

SHARE

கிழக்கு ஊடகவியாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இன ஐக்கிய இப்தார் நிகழ்வு.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இன ஐக்கிய இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(01.03.2026) ஒன்றியத்தின் உப தலைவர் சிரேஷ்ட ஊடகவியாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் காத்தான்குடியில் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேலின் வரவேற்புரையுடன்  மௌலவி எம்.எச்.எம். இக்பால் பலாஹியின் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பமானது. 

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யு.எல்.அப்துல்லாஹ், தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி,சர்வமத ஒன்றியத்தின் தலைவர் ஏம்.மனோகரன் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத் தலைவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர். 

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஸ்மல் பலாஹி இப்தார் பயான் நிகழ்த்தினார்.

பெரும் எண்ணிக்கையிலான தமிழ், முஸ்லிம் சமுகத்தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கிழக்கு ஊடகவியலாளர் ஓன்றிய உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஒன்றியத்தின் உறுப்பினர் எம்.துஷ்யந்யதன் நன்றியுரை நிகழ்த்தினார்.







































SHARE

Author: verified_user

0 Comments: