தமிழர்களின் பண்பாடுகளை பாதுகாப்பதற்கான சக்திகளாக இளைஞர், யுவதிகள் மாறவேண்டும் என பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.எஸ்.அமல் தெரிவித்தார். இன்று கரடியனாறு பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.அமல் இளைஞர், யுவதிகளுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று இலங்கையில் தமிழர்களின் பண்பாடுகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்து பலர் செயற்பட்டுக் கொண்டு வருகின்றனர்.
இதனை மட்டக்களப்பில் வாழும் இளைஞர், யுவதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். காரணம் இக்கால இளைஞர், யுவதிகளே எமது தமிழ் மக்களின் பண்பாடுகளை பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் கொடுக்க வேண்டியவர்கள். இல்லாவிடில் எமக்கான பண்பாடுகளை நாமே அழித்தவர்களாக மாறிவிடுவோம். இக்கருத்தினை இளைஞர்களும், யுவதிகளும் மனதில் நிறுத்தி நமது தமிழர் பண்பாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
0 Comments:
Post a Comment