கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச
உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விசேட சந்தர்ப்பம்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த உத்தியோகங்தர்கள் தபால் மூலம்
வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்
தெரிவிக்கின்றார்.
இதேவேளை தேர்தல் கடமைகளின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்குதகவல்களை வழங்காத அரச உத்தியோகஸ்தர்கள் தமது தகவல்களை உடனடியாக சமர்ப்பிக் வேண்டும் எனவும் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்களார்
அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தபால் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணியுடன் வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு செய்யப்படும் என தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினத்திற்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களின்
பிரதேசத்திற்கு பொறுப்பான தபால் அலுவலகத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை
உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறும் தபால்
மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வாக்களிப்பு தினத்தன்று மாலை நான்கு மணிவரை தபால்
அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தபால்
மாஅதிபர் ரோஹன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment