7 Aug 2015

சிறையிலிருந்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார்.

SHARE

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்  ஒருவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு வியாழக்கிழமை தோற்றியதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில்; கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இந்த மாணவர் வைக்கப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இந்த மாணவர் பரீட்சை நிலையத்துக்கு சமூகமளித்து பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இந்த மாணவன் பரீட்சை எழுவதற்கான வாய்ப்பை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

காத்தான்குடியிலுள்ள வீடொன்றில் தங்கநகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இந்த மாணவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸார்  ஞாயிற்றுக்கிழமை (2.8.2015)  அன்று கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: