திருகோணமலை, மட்கோ பகுதியில் 20 புறாக்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரில் 19 வயதுடையவரை எதிர்வரும் எட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதேவேளை, 13 வயதுச் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், திருடப்பட்ட 20 புறாக்களில் 16 புறாக்களை மீட்டுள்ளதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட புறாக்களை சொந்தக்காரரிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
புறாக்களை திருடிய குற்றச்சாட்;டின் பேரில் மேற்படி இருவரும் திங்கட்கிழமை (24) மாலை கைதுசெய்யப்பட்டனர்.

0 Comments:
Post a Comment