15 Aug 2015

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது

SHARE
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 18 பேரை வியாழக்கிழமை இரவு (13) கைதுசெய்ததாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் கிண்ணியா மற்றும் உப்புவெளி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. 
இதை அடுத்து இவர்களுடைய வள்ளங்களை சோதனை செய்த வேளையில்  சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மூன்று வள்ளங்களுடன் இந்தப் 18 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸார் கூறினர்
SHARE

Author: verified_user

0 Comments: