15 Aug 2015

சிரேஷ்ட அதிகாரிகள் காலை 8.30 மணிக்கு சமூகமளிக்கவும்

SHARE
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு காலை 8.30 மணிக்கு சமூகமளிக்குமாறு அம்பாறை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலின விக்கிரமரத்ன தெரிவித்தார்.

 கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் கடமைக்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: