தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளையும், இம்ரான் மஹ்ரூப் 32, 582 விருப்பு வாக்குகளையும் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசந்த புஞ்சிநிலமே 19,953 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்இதேவேளை, மக்களால் மைத்திரிக்கு வழங்கிய ஆணை தொடரவேண்டும் என்பதே எமது விருப்பம் என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அமைப்பதற்கும் தொடர்வதற்கும் கொடுக்கப்பட்ட ஆணை பாதுகாக்கப்பட்டு, அதற்கு உதவக் கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம் அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment