14 Aug 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் தமிழ்த் தேசியத்திற்கு 3 உறுப்பினர்களையும் அபிவிருத்திக்க ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம் - முன்னாள் பிரதியமைச்சர்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் தமிழ்த் தேசியத்திற்கு 3 உறுப்பினர்களையும் அபிவிருத்திக்க ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம் - முன்னாள் பிரதியமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் தமிழ்த் தேசியத்திற்கு 3 உறுப்பினர்களையும் அபிவிருத்திக்க ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்கள்பபு மாவட்ட வேட்பாளர்  முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்தி தெரிவித்துள்ளார்.
பட்டிருப்புத் தொகுதியின் இறுதி பிரசாரக் கூட்டம் களுதவளையில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

விசமப்பிரச்சாரத்தை நிராகரிப்போம் நல்லாட்சிக்காக ஒரு தமிழனைத் தெரிவு செய்வோம எதிர் வருகின்ற திங்கட் கிழமை நடைபெறவிருக்கும், பொதுத் தேர்தல் மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கiயில் சந்திக்காத ஒரு தேர்தலாகும். சிந்தித்து வாக்களித்தால் தேசியத்திற்கு 3 உறுப்பினர்களையும், அபிவிருத்திக்கு என்னையும் தெரிவு செய்வதன் மூலம் நான் விட்டுச் சென்ற அபிவிருத்திகளையும் தொடர மேலும் ஒருவாய்ப்பு கிடைக்கும். 

நான் தமிழனை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவனுமில்லை, தேர்தல் காலங்களில் மாத்திரம், வாக்குகளைப் பெறுவதற்கு தமிழ் உணர்வுகளைப் பாய்ச்சி தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலவாதியும் நானில்லை, நான் அமைப்பாளராகவிருந்து கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்ங்கைள முன்னெடுத்தவன்.இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதென்பது உறுதியாகியுள்ள இந் நிலையில் என்னையும், ஆளும் கட்சியில் அமைச்சராக்குவதற்கு  மக்களுக்கு உங்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எனக்குக் கிடைக்கும் ஆதரவைக்கண்டு ஏனைய வேட்பாளரல்கள், பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். எனக்குப் போடும் வாக்குகள், ஒரு சகோதர இனத்தவரை தெரிந்தெடுப்பதற்கு அமையப்போவதாக பொய்ப் கூறிவருகின்றனர். நம்மிடம் இருக்கும் இரண்டு இலட்சத்தி எண்பதாயிரம்வாக்குகளில் எனக்குத் தேவையானது இருபதாயிரம் வாக்குகள் மாத்திரமே என்பின் வரும் மக்கள் கூட்டத்தினைக் கண்டு பயந்தவர்களே இவ்வாறான பொய்பிரசாரங்களில் இடுபடுவதாகவே நான் கருதுகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.  










SHARE

Author: verified_user

0 Comments: