ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்காக வேண்டி கையெப்பமிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு
மாமாங்கத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.
இதன்போதுஊடக சுதந்திரத்தை குழிக்குள் தள்ளிவிட்ட ஆட்சியாளர் எவருக்கும்
வாக்களிக்க வேண்டாம், வென்றெடுத்த ஊடக சுதந்திரத்தை, பாதுகாப்பதற்காக
சக்திமிக்க நாடாளுமன்றத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் போன்ற
வாசகங்ககள் பொறிக்கபடப்ட துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப் பட்டன.
ஊடக சுதந்திர செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வின்
இறுதியில், கொலை செய்யப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் வாழ்க்கைக்
கடமையைச் செய்வோம் எனும் பாதைகைகளை எந்தியவாறு ஊடகவியலாளர்கள் அமைதியான
முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment