அமையவிருக்கின்ற புதிய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசும் சகத்தியாக மாறவேண்டும். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் எந்தக் பேரினவாதக் கட்சியும் தனியாக அரசை அமைக்கும் நிலை ஏற்பாடாது. புதிய அரசை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதற்கு வடக்கு கிழக்கு வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இன்று வியாழக் கிழமை (30) மட்டக்களப்பு கூளாவடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
கடந்த 2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டதனால் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைப பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
இருந்த போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் எமது மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்திருந்தன. மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள கிராமப் புறங்களிலுள்ள மக்கள் ஆர்வத்துடன் அதிகளவு வாக்குகளை அளிக்கின்றனர். மாறாக நகர்புறங்களிலுள்ளவர்களின் வாக்குப்பதிவுகள் குறைவாகவே கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இந்த நிலையை மாற்றி எதிர் வருகின்ற 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும், காலை வேளையிலே உரிய நேரத்திற்குச் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் பட்டசத்தில் இந்த மாட்டத்திலிருந்து 4 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகளுக்கும், அபிலாசைகளுக்கும், பதவிகளுக்கும், துணைபோனதில்லை. அவ்வாறு துணைபோயிருந்தல் கடந்த காலங்களில் எமது கூட்டமைப்பு இலங்கை அரசில் மிகப் பெரிய அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று செயற்பட்டிருக்கும்.
எமது மக்களின் அடைப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட வேண்டும், தேசிய பிரச்சனையாகக் காணப்படும் இனைப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படல் வேண்டும், சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர் யுவதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் போனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், எமது மக்களின் பறிபோன நிலங்கள் மீளக் கிடைக்க வேண்டும் இவ்வாறான பல அம்சங்களை முன்வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment